காதல் திருமணம் செய்த பெண், ஆணவக்கொலை செய்யப்பட்டாரா?

0 374

ஆந்திரப்பிரதேசத்தில் வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்த பெண் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், அவர் ஆணவக் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சித்தூர் மாவட்டம் ரெட்லபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தனா. இவர் அதே ஊரைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் என்ற இளைஞரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் சில நாட்களுக்கு முன்பு இளம் ஜோடிகள் திருமணம் செய்துகொண்டு ஊர் திரும்பியுள்ளனர்.

இதை தொடர்ந்து இருவரின் பெற்றோரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஊர் பெரியோர், சமாதானம் பேசி சந்தனா மற்றும் ஸ்ரீநிவாஸை அவரவர் பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 12 ஆம் தேதி சந்தனா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறி அவரது உடலுக்கு பெற்றோர் இறுதிச்சடங்கு செய்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், வேறு சமூகத்தைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸை சந்தனா திருமணம் செய்ததால் ஆணவக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் சந்தனாவை கொன்றவர்கள் தன்னையும் கொல்லக்கூடும் என்று கூறி தலைமறைவாக உள்ள ஸ்ரீநிவாஸ் மற்றும் அவரது தந்தையையும் போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments