கேஸ் சிலிண்டர் வெடித்து 10 பேர் பலி

0 555

உத்தரப்பிரதேசத்தில் ஒரு கிராமத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் 2 மாடி வீடு இடிந்து விழுந்து 10 பேர் உயிரிழந்தனர்.

உத்தரப்பிரதேசத்தின் மாவ் மாவட்டத்தில் முகமதாபாத் பகுதியில், வாலித்பூர் என்ற கிராமத்தில் இன்று காலை பெரும் சத்தத்துடன் 2 மாடி வீடு ஒன்று இடிந்து விழுந்துள்ளது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் பதறிப்போய் பார்த்தபோது இடிபாடுகளில் சிக்கி 10 பேர் உயிரிழந்து கிடந்துள்ளனர்.

சமையல் அறையில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து இந்த கோர விபத்து ஏற்பட்டதாக அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர். இடிந்து கிடந்த வீட்டில் தீப்பிழம்புகளை பார்த்ததாகவும் அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர். இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்துள்ளனர். இடிபாடுகளில் யாரேனும் சிக்கியுள்ளனரா என மீட்பு மற்றும் தீயணைப்பு படையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

விபத்து எப்படி நேரிட்டது என்பது தொடர்பான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறியுள்ள உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments