2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தம்

0 852

2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் அச்சிடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு உயர் மதிப்பு கொண்ட 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என மத்திய அரசு திடீரென அறிவித்தது. அடுத்த சில தினங்களில் 2 ஆயிரம் ரூபாய் தாள்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டது கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. அண்மைக் காலமாக 2 ஆயிரம் ரூபாய் ஏடிஎம்களில் சரிவர கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள ரிசர்வ் வங்கி, உயர் மதிப்புக் கொண்ட பணம் மதிப்பிழப்பு செய்யப்பட்ட பின்னர் கடந்த 2016 - 17 மற்றும் 2017 -18ம் நிதியாண்டுகளில் 2 ஆயிரம் ரூபாய் அச்சிடப்பட்டதாகவும், ஆனால் 2019 - 2020ம் நிதியாண்டில் ஒரு நோட்டு கூட அச்சிடப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

இதற்கு ஆதரவு தெரிவித்துள்ள பொருளாதார நிபுணர்கள், திடீரென ரூபாய் செல்லாது என்று அறிவிப்பதை விட படிப்படியாக புழக்கத்தைக் குறைத்தால் எந்தப் பிரச்னையும் ஏற்படாது என்று கருத்துத் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments