தமிழகத்தில் இந்த ஆண்டு டெங்கு அறிகுறியுடன் 3000 பேர் அனுமதி

0 301

தமிழகத்தில் இந்த ஆண்டு மட்டும் டெங்கு அறிகுறியுடன் சுமார் 3000 பேர் அனுமதிக்கப்பட்டதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு பாதிப்புக்காக 7 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், காய்ச்சல் பிரிவில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெங்கு காய்ச்சல் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களை ஒட்டியுள்ள தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகமாகப் பரவியதாகவும், டெங்கு உள்ளிட்ட அனைத்து வகையான காய்ச்சலையும் தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். மக்கள் காய்ச்சல் வந்தால் மருந்தகங்களை நாடாமல், அரசு மருத்துவமனைகளில் உள்ள 24 மணி நேர காய்ச்சல் தனி பிரிவுகளை அணுகவும் கேட்டுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments