IndvsSA Test Cricket : தோல்வியின் விளிம்பில் தென்னாப்பிரிக்கா

0 196

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பாலோ ஆன் ஆன தென்னாப்பிரிக்கா அணி தோல்வியை தவிர்க்கப் போராடி வருகிறது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி, மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்பிற்கு 601 ரன்கள் குவித்து, டிக்ளேர் ஆனது. கேப்டன் விராட் கோலி இரட்டை சதமும், தொடக்க ஆட்டக்காரரான மயங்க் அகர்வால் சதமும் அடித்தனர்.

பின்னர் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. முகமது சமி மற்றும் உமேஷ் யாதவின் அபார பந்துவீச்சில், தென்னாப்பிரிக்காவின் முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

கேப்டன் பாப் டூ பிளெஸ்ஸிஸ் நிதானமாக ஆடி அரை சதம் கடந்தார். மஹாராஜ் மற்றும் பிலாண்டர் ஆகியோர் பொறுப்புடன் ஆடி, தென்னாப்பிரிக்காவை ஓரளவு சரிவில் இருந்து மீட்டனர்.

இறுதியில் அந்த அணி 275 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். முதல் இன்னிங்சில் 326 ரன்கள் பின் தங்கிய தென்னாப்பிரிக்கா அணி பாலோ ஆன் ஆனது.

போட்டியின் நான்காவது நாளான இன்று, தென்னாப்பிரிக்கா அணி விளையாடி வருகிறது. இந்த இன்னிங்சிலும் இந்திய அணியின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த அணி வீரர்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்து வருகின்றனர்.
பிற்பகல் 1.30 மணி நிலவரப்படி அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்திருந்தது. தோல்வியை தவிர்க்க அந்த அணி போராடி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments