வீட்டு வாசலில் படுத்திருந்த நாயை சிறுத்தை விரட்டிச் செல்லும் காட்சி

0 704

சிறுத்தை ஒன்று நாயைக் கடித்த பின்னர் விரட்டிச் செல்லும் சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. கடந்த மாதம் 29ஆம் தேதி இரவில் பதிவான இந்த காட்சியில் வீட்டின் முன்பு வாசற்படியில் கருப்பு நிறமுடைய நாய் படுத்து உறங்குகிறது.

அப்போது வீட்டின் வாயிலுக்கு மெதுவாக வந்த சிறுத்தை வாசற்படியில் படுத்திருந்த நாயை கடித்தபோது நாய் சத்தம் போட்டபடி எழுந்து ஓடும் காட்சியும் நாயை சிறுத்தை துரத்தும் காட்சியும் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ எந்த பகுதியில் பதிவானது என்பது குறித்து குறிப்பிடப்படவில்லை. சமூக வலைதளங்களில் இந்தக் காட்சி தற்போது பகிரப்பட்டு வருகிறது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments