ஜம்மு காஷ்மீரில் திங்கட்கிழமை முதல் செல்போன்கள் சேவை தொடங்கும்

0 201

ஜம்மு காஷ்மீரில் 70 நாட்களுக்குப் பிறகு திங்கட்கிழமை முதல் மீண்டும் செல்போன்கள் ஒலிக்கப் போகின்றன. கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி காஷ்மீரின் சிறப்பு சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதையடுத்து செல்போன், இணைய சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் சில நாட்களுக்கு முன்பு தளர்த்தப்பட்ட போது செல்போன் இல்லாமல் சுற்றுலாப் பயணிகள் எவ்வாறு காஷ்மீருக்கு வர முடியும் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இந்நிலையில் நாளை முதல் ஜம்மு காஷ்மீரின் 10 மாவட்டங்களிலும் போஸ்ட் பெய்டு செல்போன் சேவை மீண்டும் தொடங்கப்படுகிறது.

குரல் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் அனுமதிக்கப்படும். மொபைல் வழி இணைய சேவைக்கு தடை நீடிக்கும். மாநிலத்தில் உள்ள 40 லட்சம் போஸ்ட் பெய்டு இணைப்புகளில் சுமார் 20 லட்சம் செல்போன் இணைப்புகளுக்கு வேறு மாநிலங்களுக்கான ரோமிங் வசதி வழங்கப்படவில்லை. ஒருவழியாக மீண்டும் காஷ்மீரில் செல்போன் சேவை தொடங்குவதால் காஷ்மீரில் முழு அளவுக்கு இயல்பு நிலை திரும்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments