2ஆவது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்கா 275 ரன்களில் சுருண்டது

0 1158

இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில், தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 275 ரன்களை மட்டும் எடுத்து ஆட்டமிழந்தது.

புனேயில் நடைபெற்றுவரும் இப்போட்டியின் 3ஆம் நாளான இன்று தென்னாப்பிரிக்க அணி, 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்ற நிலையில் ஆட்டத்தை தொடர்ந்தது.

இந்திய வீரர்களின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல், தென்னாப்பிரிக்க வீரர்களின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன.

டு பிளெசிஸ் நிலைத்து நின்று விளையாடி 64 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் பிலான்தருடன் மகராஜ் ஜோடி சேர்ந்தார்.

சிறப்பாக விளையாடிய மகராஜ் அரைசதம் கடந்தார். 132 பந்துகளில் 72 ரன்களை எடுத்தபோது அவரும் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அதன்பிறகு வந்த ரபடா 2 ரன்களில் ஆட்டமிழக்கவே, 105.4ஆவது ஓவரில் 275 ரன்களில் தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் சுருண்டது. பிலான்தர் மட்டும் ஆட்டமிழக்காமல் 44 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இந்திய அணி தரப்பில் அஸ்வின் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் சாய்த்தார். யாதவ் 3 விக்கெட்டுகளும், சமி 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments