நாட்டின் தொழில்துறை உற்பத்தி கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி

0 268

நாட்டின் தொழில்துறை உற்பத்தி கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தரவுகளில், கடந்த 2018 ஆகஸ்ட் மாதத்தில் 4.8 சதவீதமாக இருந்த நாட்டின் தொழில்துறை உற்பத்தி 1.1 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2012ம் ஆண்டில் ஏற்பட்ட 1.7 சதவீத வீழ்ச்சிக்கு பின்னர், இது கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவு சரிவு எனவும், கடந்த 2 ஆண்டுகளில் முதல் முறையாக ஏற்பட்ட வீழ்ச்சி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தி துறை, மூலதன பொருட்கள், நுகர்வோர் சாதனங்கள் உள்ளிட்ட துறைகளில் ஏற்பட்டுள்ள கடும் சரிவை தொடர்ந்து தொழில்துறை உற்பத்தி வளர்ச்சியும் வீழ்ச்சியடைந்துள்ளது.

ஏற்கனவே பொருளாதார மந்தநிலையால் பாதிக்கப்பட்டுள்ள வர்த்தகர்களுக்கு இந்த வீழ்ச்சி மேலும் ஒரு புதிய சவாலை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 5.2 சதவீதமாக இருந்த உற்பத்தி துறையின் வளர்ச்சி நடப்பாண்டில், 1.2 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது.

கடந்த ஆண்டில் மூலதன பொருட்கள் துறையின் வளர்ச்சி வீதம் 10.3 சதவீதமாக இருந்த, நடப்பாண்டில் அந்த துறையின் வளர்ச்சி 21 சதவீதமாக சுருங்கியுள்ளது. அதே போல் நுகர்வோர் சாதனங்கள், உட்கட்டமைப்பு மற்றும் கட்டுமானம் ஆகிய துறைகளின் வளர்ச்சியும் கடுமையாக சரிந்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments