உலக சாம்பியன்ஷிப் மகளிர் குத்துச்சண்டையில் மேரி கோம் வெண்கலம் வென்றார்

0 203

உலக சாம்பியன்ஷிப் மகளிர் குத்துச்சண்டை போட்டியின் அரையிறுதியில் தோல்வியடைந்த இந்திய வீராங்கனை மேரி கோம், வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தார்

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலக சாம்பியன்ஷிப் மகளிர் குத்துச் சண்டைப் போட்டியின் 51 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை மேரி கோம் மற்றும் துருக்கியைச் சேர்ந்த புசெனாஸ் காகிரோக்லு((Busenaz Cakiroglu)) அரையிறுதியில் மோதினர். 4க்கு 1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த 36 வயதான துருக்கி வீராங்கனை புசெனாஸ் காகிரோக்லு, 6 முறை உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற மேரி கோமை நாக் அவுட் செய்தார்.


இதனால் அரையிறுதியில் தோல்வியடைந்த மேரி கோம் வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்து போட்டியில் இருந்து வெளியேறினார். இது இவர் பெறும் 8 ஆவது உலக சாம்பியன்ஷிப் பதக்கம் ஆகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments