சைக்கோ போல் செயல்படுகிறார் ஜெகன் மோகன் : சந்திரபாபு நாயுடு சாடல்

0 553

ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, சைக்கோ போல் நடந்து கொள்வதாக முன்னாள் முதலமைச்சரான சந்திரபாபு நாயுடு கடுமையாக விமர்சித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் தோற்ற பிறகு முதல் முறையாக விசாகப்பட்டினம் சென்ற தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, கட்சி ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒய்.எஸ்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசு, மக்களுக்கு எதிரான கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வருவதாகக் கூறினார்.

இதர கட்சித் தலைவர்கள் மீது தேவையற்ற மற்றும் சட்டவிரோதமாக வழக்குகள் பதியப்படுவதாகக் குற்றம்சாட்டிய அவர், மாநில காவல்துறையும் தேவையற்ற பிரச்சனைகளை உண்டாக்கி வருவதாகப் புகார் கூறினார்.

நல்லவர்களுக்கு நல்லவராக தாம் திகழ்ந்ததாகவும் ஆனால் ஜெகன் மோகனோ சைக்கோ போல் நடந்து கொள்வதாகவும் சாடினார். இந்த ஆட்சி மிகவும் மோசமாக உள்ளதாகக் குற்றம்சாட்டிய சந்திரபாபு நாயுடு, ஜெகன் மோகனைப் போன்ற மோசமான முதலமைச்சரைப் பார்த்ததில்லை என்றும் தெரிவித்தார்.

ஆணவ அணுகுமுறையை ஜெகன் மோகன் அரசு மாற்றிக் கொள்ள வேண்டும் என்று எச்சரிப்பதாகக் கூறிய சந்திரபாபு நாயுடு, தங்கள் கட்சிப் பிரமுகர்களைக் குறிவைப்பது நியாயமல்ல என்றும் குறிப்பிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments