ஆட்டோ ஓட்டுனருக்கு 7 நாட்கள் போலீஸ் காவல்

0 413

சேலத்தில் பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய ஆட்டோ ஓட்டுனரை 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் மோகன்ராஜ், ஆபாச புகைப்படங்கள் வெளியிட்ட புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த திங்களன்று மோகன்ராஜ் வசிக்கும் பகுதியை சேர்ந்த செல்வி என்ற 35 வயது பெண் சேலம் மாநகர காவல்துறை உயர் அதிகாரிகளிடம் மனு கொடுத்தார்.

அதில் தன்னை ஆட்டோ ஓட்டுனர் மோகன்ராஜ் பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகவும், தனது கணவர் தன்னை விட்டுச் சென்று விட்டதால் வீட்டு செலவிற்காக மோகன்ராஜிடம் 10 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்த தாகவும் தெரிவித்திருந்தார். இந்த பணத்தை தரும்படி தொந்தரவு செய்த மோகன்ராஜ் வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதுதொடர்பாக மோகன்ராஜிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி கொண்டலாம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் புஷ்பராணி சேலம் நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதி செந்தில்குமார், சேலம் சிறையில் உள்ள மோகன்ராஜை 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.

இதையடுத்து கொண்டலாம்பட்டி காவல் நிலையத்துக்கு மோகன்ராஜை அழைத்து சென்று போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். செல்வியை பாலியல் பலாத்காரம் செய்ததுபோல இவர் வேறு பெண்களிடமும் நடந்துள்ளாரா என்றும் ஆபாச புகைப்படங்களை வேறு பெண்களை வைத்து எடுத்துள்ளாரா? என்றும் தற்போது விசாரணை நடந்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments