இந்தோனேசிய தூதரகத்தில் திடீர் தீ விபத்து

0 178

தாய்லாந்து நாட்டிலுள்ள இந்தோனேசியா தூதரகத்தில் நேரிட்ட தீ விபத்தால் அப்பகுதியே புகைமூட்டமாக காட்சியளித்தது.

பேங்காக் நகரில் உள்ள இந்தோனேசியா தூதரகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தூதரக அறை ஒன்றில் பிடித்த தீ மளமளவென்று பிற பகுதிகளுக்கு வேகமாக பரவியது. இதனால் கட்டடத்தில் இருந்து பல அடி உயரத்தில் புகை கிளம்பியது.

தீ விபத்து குறித்த தகவலின்பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தில் தூதரக கட்டிடத்தின் மேல்பகுதி முழுவதும் சேதமடைந்தது.

தீ விபத்தில் 4 பேர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்துக்கு மின்கசிவு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments