தமிழகத்தில் 13 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

0 274

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் புதுவையில் ஓரிரு இடங்களிலும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், கோவை, ஈரோடு,நீலகிரி சேலம்,தர்மபுரி கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, சிவகங்கை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான  மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் 5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர், நீலகிரி மாவட்டம் தேவாலா, திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் உள்ளிட்ட இடங்களில் 3 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம், கோவை மாவட்டம் வால்பாறை, சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் தலா 2 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments