தேம்ஸ் நதியில் சடலமாக மிதந்த கூன்முதுகுத் திமிங்கலம்

0 299

லண்டனின் தேம்ஸ் நதியில் சடலமாக மீட்கப்பட்ட கூன்முதுகுத் திமிங்கலத்துக்கு உடற்கூறாய்வு நடத்தப்படவுள்ளது. கிரேவ்செண்ட் அருகே உள்ள பாலத்துக்கு அடியில் ராட்சத உயிரினம் ஒன்றின் சடலம் மிதப்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு விரைந்த அதிகாரிகள் 33 அடி நீள கூன்முதுகுத் திமிங்கலத்தின் சடலத்தைக் கண்டனர். அதிக எடையில் இருந்ததால் மிகவும் ரோந்துப் படகுகளின் உதவியோடு சிரமப்பட்டு அதை இழுத்துவந்து கரை சேர்த்தனர். பின், அதன் உடல், லண்டன் உடற்கூறாய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. அதன் அறிக்கை வந்த பின்பே இறப்புக்கான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் குறிப்பிட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments