ஜிஎஸ்டி வரி சீர்திருத்தங்களை விரைந்து மேற்கொள்ள மத்திய அரசு திட்டம்

0 169

ஜிஎஸ்டி வரி சீர்திருத்தங்களை விரைந்து மேற்கொள்ளும் வகையில், புதிய குழுவை  அமைத்துள்ள மத்திய அரசு, 15 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. 19 மாதங்களில் இல்லாத அளவுக்கு, கடந்த செப்டம்பரில் ஜிஎஸ்டி வரி வருவாய் 92 ஆயிரம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

இத்துடன் பொருளாதார மந்தமும்  சேர்ந்துகொண்டுள்ள நிலையில், ஜிஎஸ்டி வரி முறையில் அமைப்பு ரீதியான மாற்றங்களை கொண்டுவருவது நிலைமையே மேம்படுத்த உதவும் என அரசு கருதுகிறது. இதை உணர்த்தும் வகையில், 15 நாட்களுக்குள் முதல் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்ற உத்தரவுடன் ஜிஎஸ்டி சீர்திருத்தத்திற்கான பரிந்துரை குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

ஜிஎஸ்டி வரிமுறையில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து ஆராயுமாறு கமிட்டிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி தவறாக பயன்படுத்தப்படுவதை தடுத்தல், சம்மந்தப்பட்டவர்கள் தாங்களாக முன்வந்து வரிதாக்கல் செய்வதை மேம்படுத்துதல் ஆகியவற்றிற்கான வழிமுறைகள் குறித்து பரிந்துரைக்குமாறு குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வரிஏய்ப்பு தடுப்பு, வரி தாக்கல் முறையாக செய்யப்படுகிறதா என்ற கண்காணிப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றிற்கும் வழிமுறைகளை பரிந்துரைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொள்கை ரீதியாக எடுக்கப்பட வேண்டிய முடிவுகள், சட்டத்தில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள், வரி விதிப்பை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் பரிந்துரைக்க குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த குழுவில் தமிழ்நாடு, மேற்குவங்கம், பஞ்சாப், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேச மாநிலங்களில் இருந்து வரித்துறை உயரதிகாரிகள் இடம்பெறுகின்றனர். பிற மாநிலங்களை சேர்ந்தவர்களின் ஆலோசனைகளையும் ஏற்கத் தயாராக இருப்பதாக ஜிஎஸ்டி கவுன்சில் செயலகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments