2018 மற்றும் 2019ம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

0 365

இலக்கியத்திற்கான நோபல் பரிசு, 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளுக்கு, இரண்டு பேருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

2018ஆம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு, போலந்து நாட்டைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் வோல்கா டோகார்ஸ்க்கு வழங்கப்படுகிறது. 2019ஆம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஆஸ்திரியாவின் பீட்டர் ஹான்கேவுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மொழியியல் ஆளுமை, மனித அனுபவத்தின் தனித்துவத்தை ஆய்ந்தறிந்து, புராண வடிவில், இலக்கிய செறிவுமிக்க கதைகளை படைத்தளிப்பதில் ஆற்றமிக்கவராக திகழ்வதை, கெளரவிக்கும் வகையில், போலந்து பெண் எழுத்தாளர் வோல்கா டோகார்ஸ்க்கு 2018ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

புக்கர் பரிசு உள்ளிட்ட பன்னாட்டளவிலான இலக்கிய கெளரவங்களையும், போலந்து பெண் எழுத்தாளர் வோல்கா பெற்றிருக்கிறார். ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த பீட்டர் ஹான்கே, சிறந்த நாவலாசிரியராக திகழ்கிறார்.

மேலும், சிறந்த நாடக ஆசிரியராகவும், திரைப்பட கதாசிரியராகவும் திகழ்கிறார். இவரது, இலக்கியத் திறனை பாராட்டி கெளரவிக்கும் விதமாக, 2019ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்தாண்டு, இலக்கியத்துக்கான நோபல் பரிசு தேர்வு குழு உறுப்பினர்கள் மீது எழுந்த பாலியல் புகார் காரணமாக, நோபல் பரிசு அறிவிக்கப்படாமல், ஒத்திவைக்கப்பட்டது. இதனால், இந்தாண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசோடு, கடந்தாண்டுக்கான நோபல் பரிசும் சேர்த்து அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments