7 தலை பாம்பின் தோல் உரிந்து கிடப்பதாக தகவல் உண்மையா ?

0 674

பெங்களூரு அருகே 7 தலைகள் கொண்ட பாம்பின் தோல் கோவில் அருகே கிடப்பதாக வீடியோ வைரலாகும் நிலையில், அப்படியொரு பாம்பு இருக்க வாய்ப்பில்லை என நிபுணர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

மரிகவுடண்ண டோட்டி  என்ற கிராமம் பெங்களூருவில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அங்கு 7 தலைகள் கொண்ட பாம்பின் தோல் உரிந்து கிடப்பதாகக் கூறி சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது. கோவில் அருகே காணப்பட்டதால் கதைகள், காவியங்களில் வரும் 7 தலை சர்ப்பமாக இது இருக்கும் என தகவல் காட்டுத் தீ போல பரவியது.

இதுகுறித்த தகவல் தொலைக்காட்சிகளிலும் செய்தி வெளியான நிலையில் 7 தலை பாம்பின் தோலைக்காண மக்கள் குவிந்து வருகின்றனர். இருப்பினும், இப்படியொரு பாம்பு நிஜத்தில் இருக்க வாய்ப்பில்ரைல என பாம்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளும் நிபுணர்கள் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments