திருவாவடுதுறை ஆதீன கோயில்கள் மீது மோசடி -அறநிலையத்துறை ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

0 208

திருவாவடுதுறை ஆதீனத்திற்கு உட்பட்ட கோயில்களில் மோசடி நடைபெற்றதாக கூறப்படும் புகார் குறித்து இந்து அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி ஆழ்வார்திருநகரியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு உட்பட்ட, திருவிடைமருதூர், மகாலிங்க சுவாமி திருக்கோயிலில் நாள்தோறும் பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி பூஜைக்காக, நபர் ஒன்றுக்கு ரூபாய் 550 ம், உபய வரவாக 100 ரூபாயும் வசூலிக்கப்படுவதாகவும், இந்த வசூலில் சுமார் 2 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாகவும் கூறியிருந்தார்.

மேலும் இந்த ஆதீனத்திற்கு உட்பட்ட சிலகோயில்களில் குற்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளது குறித்து அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு, இந்த புகார் குறித்து இந்து அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments