பாகிஸ்தான் பகுதியிலிருந்து இந்திய பகுதிக்குள் டிரோன் பறந்ததால் பதற்றம்

0 298

பாகிஸ்தான் பகுதியிலிருந்து, இந்திய எல்லைக்குள், தொடர்ந்து மூன்றாவது நாளாக, டிரோன் பறந்துள்ளதை, எல்லைப் பாதுகாப்பு படை உறுதி செய்திருக்கிறது.

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் அருகே, இருநாடுகளுக்கு இடையே ஹூசைனிவாலா எல்லைப்பகுதி அமைந்திருக்கிறது. இதையொட்டியுள்ள கிராமம் மற்றும் விவசாய நிலங்களுக்கு உட்பட்ட பகுதியில், மூன்றாவது நாளாக, டிரோன் ஒன்று பறந்திருக்கிறது.

பாகிஸ்தான் பகுதியிலிருந்து பறந்து வந்த அந்த டிரோன், மீண்டும், அப்பகுதிக்கே திரும்பிச் சென்றிருப்பதை, எல்லைப் பாதுகாப்பு படையினர் உறுதி செய்திருக்கின்றனர்.

நேற்றிரவு 7.15 மணியளவில் பாகிஸ்தான் பகுதியிலிருந்து, மூன்றாவது நாளாக பறந்துவந்த டிரோன் குறித்து, பாஞ்சாப் மாநில காவல்துறையினரிடம், எல்லைப் பாதுகாப்பு படையினர் அளித்த புகாரைத் தொடர்ந்து, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments