தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

0 689

தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை, கோவை, ஈரோடு, நீலகிரி, சேலம், தருமபுரி மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், தமிழகம் மற்றும் புதுவையில் பிற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம்,சிவகங்கை, கோவை,ஈரோடு, நீலகிரி, சேலம்,தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களைப் பொறுத்தவரை ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் பகுதி மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 7 சென்டிமீட்டர் மழையும், தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, நாமக்கல் நகர் பகுதிகளில் தலா 4 சென்டிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை, கோவை மேட்டுப்பாளையத்தில் 3 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments