நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் உதித் சூர்யாவுக்கு மேலும் 15 நாள் காவல் நீடிப்பு

0 306

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மருத்துவக்கல்லூரி மாணவர் உதித் சூர்யாவின் காவலை மேலும் 15 நாட்களுக்கு நீட்டித்து தேனி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக்கலூரியில் சேர்ந்த மாணவர் உதித் சூர்யா,கடந்த 25 ம் தேதி திருப்பதியில் தந்தை வெங்கடேசுடன் கைது செய்யப்பட்டார்.

சிபிசிஐடி போலீசார் விசாரணைக்குப் பின்னர் இருவரையும் தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் காவலில் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

இன்றுடன் காவல் நிறைவடைந்ததைத்தொடர்ந்து உதித்சூர்யா அவரது தந்தை ஆகிய இருவரும் மதுரை மத்திய சிறையில் இருந்து தேனி அழைத்துச்செல்லப்பட்டு மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர் .

நீதிபதி பன்னீர்செல்வம் விசாரித்து, இருவரது காவலையும் மேலும் 15 நாட்கள் நீட்டித்து வரும் 24 ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments