கடந்த ஆண்டை காட்டிலும் டெங்கு பாதிப்பு குறைவு - விஜயபாஸ்கர்

0 203

டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க வகை செய்யும் நடமாடும் மருத்துவமனைகள், நிலவேம்பு வழங்கும் வாகனங்கள், கொசு ஒழிப்பு இயந்திரங்கள் உட்பட 150க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்னையில் உள்ள ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தில் இருந்து இன்று புறப்பட்டன.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு செல்லும் இந்த வாகனங்களை டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த பணியை மேற்கொள்வதுடன், மக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்த உள்ளன.

இந்த வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, “ தொடர்ந்து ஏழு நாட்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் வாகனங்கள் இயக்கப்படும் என்றும், காய்ச்சல் பரவுவதை தடுக்க அமைக்கப்பட்ட நடமாடும் மருத்துவக்குழுக்கள் டிசம்பர் மாதம் வரை செயல்படும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், காய்ச்சலால் பாதிக்கபப்ட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க கூடுதலாக 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் நடந்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கிடையே வட சென்னை பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு படுக்கை வசதிகள் இல்லை என கூறி அனுமதிக்க மறுக்கப்படுவதாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய விஜயபஸ்கர், ஸ்டான்லி உள்ளிட்ட அனைத்து மருத்துவமனைகளிலும் புதிதாக வார்டுகள் தொடங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டதுடன் கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது டெங்கு பாதிப்பு குறைவாக உள்ளதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments