தீபாவளிப் பண்டிகையையொட்டி 26ந் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை

0 592

தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான சனிக்கிழமையன்று பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது என்று கூறப்பட்ட நிலையில், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, வரும் 26ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

27ந் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று தீபாவளி வருவதால், அதற்கு முந்தைய நாள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

சொந்த ஊர்களுக்கு சென்று குடும்பத்தினருடன் தீபாவளியைக் கொண்டாட ஏதுவாக, கூடுதல் நாட்கள் விடுமுறை வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.இந்த நிலையில், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, வரும் 26ம் தேதி விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

அதேபோல, 28ம் தேதியன்று விடுமுறை தேவைப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட பள்ளிகள் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற்று உள்ளூர் விடுமுறை என்ற அடிப்படையில் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்றும், அதற்கு பதிலாக சனிக்கிழமை வேலை நாளாக செயல்படலாம் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments