மாமல்லபுரத்தை ஒட்டிய 22 கிராம மீனவர்கள் கடலுக்கு செல்லத் தடை

0 4677

மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு நடைபெறுவதையொட்டி 22 கிராம மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இரு நாட்டு தலைவர்களும் 11-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை மாமல்லபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

இதையொட்டி 22 கிராம மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல தடை விதித்து மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.

ஈஞ்சம்பாக்கம் முதல் புதுப்பட்டினம் வரையிலான மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடி தமிழக வருகையின் போது அவர்களுடன் பாதுகாப்பிற்கு செல்லும் அதிகாரிகள் செல்வதற்கென என ஒரே மாதிரியான 30 இன்னவோ கார்களை வாடகைக்கு வாங்கப்பட்டுள்ளது.

சீன அதிபர் மற்றும் பிரதமரின் வாகனத்துடன் பாதுகாப்பு அதிகாரிகளும் செல்வதற்காக இந்த கார்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளன.

30 இனோவா கார்களை 6 நாட்கள் வாடகைக்கு எடுத்துள்ள அதிகாரிகள் அவற்றை முழுமையாக பரிசோதித்து, சென்னை விருந்தினர் மாளிகை அருகில் நிறுத்தினர்.

பாதுகாப்புத்துறை வசம் ஒப்படைக்கப்படும் இந்த கார்களை காவல்துறையினரே இயக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments