ஒரு மாதத்திற்கும் மேல் தாமதமாக முடிவுக்கு வருகிறது தென்மேற்கு பருவமழை

0 563

வழக்கத்தை விட ஒரு மாதம் வரை கூடுதலாக பெய்த நிலையில் தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வந்துள்ளதாக  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், தென்மேற்கு பருவமழை ஆண்டு தோறும்  செப்டம்பர் மாத தொடக்கத்தில் முடிவுக்கு வருவது வழக்கம் என்ற நிலையில், நடப்பு ஆண்டில் அக்டோபர் மாதம் வரை மழை பொழிவு நீடித்ததாக கூறப்பட்டுள்ளது.

தற்போது தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வர ஆரம்பித்துள்ளதாகவும் பஞ்சாப், அரியானா மற்றும் வடக்கு ராஜஸ்தானில் மழை முற்றிலும் குறைந்து விட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  நாட்டின் வடமேற்கு மாநிலங்களின்  வளிமண்டலத்தில் படிப்படியாக ஈரப்பதம் குறைதல் மற்றும் மழைப்பொழிவு குறைதல் ஆகிய காரணங்களால் தென்மேற்கு பருவமழை படிப்படியாக குறைந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. 

அடுத்த இரண்டு நாட்களில் வடமேற்கு இந்தியாவின் மற்ற பகுதிகளிலும், அதற்கடுத்த 2-3 நாட்களில் மத்திய இந்தியாவிலும் தென்மேற்கு பருவ மழை குறையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 1961, 2007 ஆகிய ஆண்டுகளிலும் தென்மேற்கு பருவமழை இயல்பு நாட்களுக்கும் அதிகமாக பெய்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments