ஒரு கோடி இழப்பீடு கோரி சுபஸ்ரீயின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்

0 683

சென்னையில் பேனர் விழுந்து நிகழ்ந்த விபத்தில் இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில், ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக்கோரி  அவரின் தந்தை ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கடந்த மாதம் 18ம் தேதி பல்லாவரம் -துரைப்பாக்கம் நெடுஞ்சாலையில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர் இருசக்கர வாகனத்தில் சென்ற தனது மகள் சுபஸ்ரீயின் மீது விழுந்ததில் அவர் உயிரிழந்ததாக குறிப்பபிடப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக பேனர் வைத்ததை அதிகாரிகள் தடுக்காததே தனது மகளின் உயிரிழப்புக்கு காரணம் என்றும் சட்டவிரோத பேனர்களை அகற்ற சட்டம் இருந்தும் அதனை அரசு அதிகாரிகள் முறையாக செயல்படுத்தவில்லையென அதில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், தனது மகளின் மரணம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்கவும், மகளை இழந்து வாடும் தங்களுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என செப்டம்பர் 24ம் தேதி தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேபோல், அனுமதியின்றி பேனர்கள் வைப்பவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கும் சட்டத்திருத்தம் கொண்டுவர தமிழக அரசு உத்தரவிட வேண்டும் எனவும் ரவி மனுவில் கோரியுள்ளார். இந்த மனு மீதான விசாரணை அக்டோபர் 10ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments