மனிதர்களை போல் இசையை கேட்டு நடனமாடும் திறன் கொண்ட கிளிகள்

0 316

மனிதர்களை போல் கிளிகளுக்கும் இயற்கையிலேயே இசையை கேட்டால் நடனமாடும் தன்மை இருப்பதை ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்காவை சேர்ந்த ஐரினா ஸ்கல்ஸ்(Irena schulz) என்பவர் வளர்த்து வரும் ஸ்நோபால் என்ற வெள்ளை நிற கிளி, தலையை அசைத்தும், கால்களை தட்டியும் Backstreet Boys' குழுவின் "Everybody" பாடலுக்கு நடனமாடிய காட்சிகள் கடந்த 2007ம் ஆண்டு சமூக வலைதளங்களில் வைரலாகியது.

பலரும் கிளியின் திறனை ரசித்தபோதிலும், கிளி தனது உரிமையாளரின் நடனத்தை பார்த்து நடனமாடுகிறதா அல்லது இசையின் தாளத்துக்கு ஏற்ப இந்த அசைவுகளை செய்கிறதா என்ற சந்தேகம் ஆராய்ச்சியாளர்களுக்கு எழுந்தது.

அதன்படி மேற்கொண்ட ஆய்வு முடிவில், கிளிகளுக்கும் மனிதர்களை போல், இயற்கையிலேயே இசைகளை கேட்டு, அதற்கு ஏற்ப நடனமாடும் தன்மை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இசைக்கு ஏற்ப கிளி 14 விதமான நடனங்களை தானாக கற்றுக்கொண்டதை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள், ஸ்நோபால் கிளி போல், சில வகை பறவைகளும் அதிநவீன அறிவாற்றல் மற்றும் படைப்பாற்றல் திறன் கொண்டவை என கண்டறிந்துள்ளனர்.

பொதுவாகவே, சில விலங்குகள் உணவு மற்றும் இனச்சேர்க்கைக்காக விநோத தொனியை எழுப்புகின்றன. ஆனால் இந்த ஸ்நோபால், தன்னை பராமரிப்பவர்களை மகிழ்ச்சிப்படுத்த இதுபோன்ற நடனங்கள் மேற்கொள்வதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments