தீபாவளிக்கு அடுத்த நாள், உள்ளூர் விடுமுறை அடிப்படையில் விடுப்பு எடுக்கலாம்

0 1093

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இம்மாதம் 26 மற்றும் 27ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், 28ம் தேதியன்று உள்ளூர் விடுமுறை என்ற அடிப்படையில் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று பள்ளி நிர்வாகத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

வருகிற 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதற்கு முந்தைய நாளான சனிக்கிழமை பள்ளி வேலை நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வெளியூர் செல்லும் மாணவர்களின் நலன் கருதி விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது.

அதேபோல தீபாவளி முடிந்த அடுத்த நாளான 28ம் தேதி திங்கட்கிழமை பள்ளி வேலை நாள் என்பதால் விடுமுறை தேவைப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட பள்ளிகள் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற்று உள்ளூர் விடுமுறை என்ற அடிப்படையில் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.

அவ்வாறு விடுமுறை எடுக்கும் பள்ளிகள் அதற்கு பதிலாக சனிக்கிழமை வேலை நாட்களாக செயல்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments