வைத்த வெடிகுண்டில் தானே சிக்கிய திருடன்

0 533

ரஷ்யாவில் ஏடிஎம் பணப்பெட்டியை உடைக்க குண்டு வைத்த திருடன், குண்டு வெடிப்பிலேயே படுகாயமடைந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

செரபோவெட்ஸ் ((Cherepovets)) என்ற நகரில், ஏடிஎம் மையத்துக்குள் புகுந்த திருடன் அதிலிருந்த பணப்பெட்டியை எடுத்து உடைப்பதற்காக குண்டு வைத்தான். ஆனால் எதிர்பாராத விதமாக அந்த குண்டு அவன் மீதே வெடித்துச் சிதறியது.

இந்த வெடிவிபத்தில் ஏடிஎம் கண்ணாடிகள் உடைந்தன. படுகாயமடைந்த நிலையிலும் திருடன் தப்பிச் சென்ற நிலையில், தடயங்கள் ஏதும் கிடைக்கிறதா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீடுதான் இடிந்துவிழுவதாகக் கருதும் அளவு, வெடிச்சத்தம் பலமாக இருந்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments