"2022 ஆக. மாதத்திற்குள் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் பணி தீவிரம்"

0 309

ககன்யான் திட்டத்தின் மூலம் மனிதர்களை 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் விண்வெளிக்கு அனுப்பும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தின் திட்ட இயக்குனர் மூக்கையா தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் உள்ள தனியார் கல்லூரி மற்றும் மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி மையம் இணைந்து நடத்திய கண்காட்சியில் கலந்து கொண்ட பின், செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் மூக்கையா இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட மங்கல்யான் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, உலக விண்வெளி வாரத்தினை முன்னிட்டு நடத்தப்பட்ட கண்காட்சியில் சந்திராயன்-2 பற்றிய 50 அரிய படங்கள், பி.எஸ்.எல்.வி மாதிரிகள் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன.

இந்த பயனுள்ள விண்வெளி விளக்க கண்காட்சியை சுற்றுவட்டாரப்பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் பார்த்து பயனடைந்தனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments