பிரான்ஸ் அமைச்சரோடு பயனுள்ள பேச்சுவார்த்தை செய்ததாக அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்

0 209

பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சரோடு பயனுள்ள பேச்சுவார்த்தையை மேற்கொண்டதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு, பிரான்ஸ் ஆயுதப் படைகள் அமைச்சகத் தலைமையகத்துக்கு சென்ற மத்திய அமைச்சர் ராஜ்நாத் அங்கு அந்நாட்டு சார்பில் அளிக்கப்பட்ட மரியாதையை ஏற்றுக் கொண்டார். இன்று நடைபெற்ற இருநாடுகளுக்கு இடையிலான பாதுகாப்புத்துறை பேச்சுவார்த்தைகளுக்கான ஆண்டுக் கூட்டத்தில் இந்தியா சார்பில் ராஜ்நாத் பங்கேற்றறார்.

இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள ராஜ்நாத் சிங், பிரான்ஸ் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஃபுளோரென்ஸ் பார்லியுடனான சந்திப்பின் போது, பயனுள்ள பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகக் கூறியுள்ளார்.

இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை முழு வீச்சில் மதிப்பிட்டு, மறு ஆய்வுகளை மேற்கொண்டிருப்பதாகவும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார். 3 நாள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ள ராஜ்நாத்சிங், ரஃபேல் போர் விமானங்களுக்கு எஞ்சின் தயாரிக்கும் பிரெஞ்ச் மல்டிநேசனல் சாஃப்ரான் நிறுவன ஆலையையும் பார்வையிட்டார்.

மேக் இன் இந்தியா திட்டத்திற்கு பயனளிக்கும் வகையில் பிரான்சில் உள்ள தொழிலதிபர்களின் தலைமைப் பிரதிநிதிகளோடு சந்திப்பு நடத்தும் அவர், வரும் ஆண்டு பிப்ரவரி 5 முதல் 8-ம் தேதி வரை லக்னோவில் நடைபெறும் பாதுகாப்புத்துறைக் கண்காட்சிக்கு வருமாறும் அவர்களுக்கு அழைப்பு விடுக்கிறார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments