உதவித்தொகை பெற ஆதார் இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

0 328

விவசாயிகள் ஆறாயிரம் ரூபாய் உதவித் தொகை பெறுவதற்கு ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசம் அடுத்த மாதம் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவரங்களுக்கான அமைச்சரவை கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. அதன்பிறகு பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகள் பயன்பெற ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நவம்பர் மாதம் 30ம் தேதி வரை நீட்டிக்க முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், இந்த திட்டத்தின்படி ஆண்டுக்கு ஆறாயிரம் ரூபாய் உதவித்தொகை பெரும் விவசாயிகள் ரபி பருவ விதைப்புக்கு முன்பாக பயன்பெறும் வகையில் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பிரகாஷ் ஜவடேகர், கிசான் திட்டத்தின் மூலம் 7 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயனடைந்துள்ளதாக தெரிவித்தார்.

அதேபோல், இடம்பெயர்ந்த ஐந்தாயிரத்து 300 காஷ்மீரைச் சேர்ந்த குடும்பங்களுக்கு தலா ஐந்து லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments