விபத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கு ரூ.50 கோடி அவசரகால நிதியில் புதிய திட்டம் தொடங்க தமிழக அரசு முடிவு

0 312

விபத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கு முதல் 48 மணி நேரத்தில் சிகிச்சை அளிக்கும் வகையில், 50 கோடி ரூபாய் அவசரகால நிதியில் புதிய திட்டத்தை தொடங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

விபத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கு முதல் 48 மணிநேரத்தில் தேவையான சிகிச்சைகளை அளிப்பது தொடர்பான செலவுகளை ஈடுசெய்வதற்கு நிதியை உருவாக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வரும் அரசு அதிகாரிகள், காப்பீடு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அண்மையில் நடந்த சாலை பாதுகாப்பு கூட்டத்தில், ஜெனரல் இன்சூரன்ஸ் கவுன்சில் நிர்வாகிகள் மற்றும் அனைத்து உரிமம் பெற்ற காப்பீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு அதுகுறித்து விவாதித்தனர்.

இறுதியாக விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உயிரை காப்பாற்றுவதற்காக 50 கோடி ரூபாய்  நிதியில், புதிய திட்டத்தை தொடங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கென தனியார் அவசர சிகிச்சை மையங்களுடன் இணைந்து பணியை மேற்கொள்ள மாநில சுகாதாரத்துறைக்கு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை தற்போது அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments