ஸ்வீடன் ஆர்வலர் கிரெட்டாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு?

0 386

ஸ்வீடன் சுற்றுச்சூழல் ஆர்வலரான 16 வயதான கிரெட்டா தன்பர்குக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படும் என செய்தி வெளியான நிலையில், நிபுணர்கள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஸ்வீடன் தன்பர்க் என்ற சிறுமி, கடந்த ஆண்டு முதல் வெள்ளிக்கிழமைகளில் பருவ நிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டங்களை நடத்தி உலக மக்கள் மனதில் இடம்பிடித்து வருகிறார். இயற்கையை நேசிக்கும் சிறுமியின் பொதுநல சிந்தனையை பாராட்டி இதற்கு முன் amnesty international அமைப்பு விருது கொடுத்து கவுரவித்துள்ளது-  நோபல் பரிசுக்கு நிகரான right livelihood விருதும் வழங்கப்பட்டது.

சர்வதேச அளவில் பிரபலமான அவருக்கு  ‘உலக அமைதிக்கான நோபல் பரிசு பரிந்துரைக்கப்பட்டது. இந்த விருதானது வரும் வெள்ளிக்கிழமை நார்வேயில் அறிவிக்கப்பம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சிறுமி கிரெட்டாவுக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பு குறைவாகவே இருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தன்பர்க் சிறுமி என்பதால், நோபல் பரிசு அவருக்கு மட்டுமே வழங்கப்படாது என Peace Research Institute இயக்குனர் ஹென்ரிக் உர்தால் என்பவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சிறுமிக்கு, பாகிஸ்தான் சிறுமி மலாலாவுக்கு வழங்கப்பட்டது போல் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார்.  இதே கருத்தையே பிற நிபுணர்களும் முன்வைத்துள்ளனர்.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments