உதித் சூர்யாவின் தந்தைக்கும், இர்பானின் தந்தைக்கும் ஜாமின் மறுப்பு

0 680

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக கூறி கைதுசெய்யப்பட்ட, மாணவர் உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசன் மற்றும் இர்பானின் தந்தை முகமது நபி ஆகியோரின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் தொடர்பாக மாணவர் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். பின்னர் நடந்த விசாரணையின் கீழ், பிரவின் மற்றும் அவரது தந்தை சரவணன், ராகுல் மற்றும் அவரது தந்தை டேவிஸ், இர்பான் மற்றும் அவரது தந்தை முகமது நபி ஆகியோரும் கைதுசெய்யப்பட்டனர்.

இந்த நிலையில் இர்பானின் தந்தை முகமது நபி மற்றும் உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசன் ஆகியோர், ஜாமின் வழங்கக்கோரி தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கடந்த 3ஆம் தேதி மனு அளித்திருந்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி பன்னீர்செல்வம் உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments