மீண்டும் ஒரு யானைக் கூட்டம் அதே அருவியில் விழுந்து பலி

0 455

தாய்லாந்தில் குட்டி யானையைக் காப்பாற்றப் போன 5 யானைகள் உயிரிழந்த சோகம் மறைவதற்குள் மேலும் 5 யானைகளின் சடலம் அதே அருவியின் கீழ் மீட்கப்பட்டுள்ளன.

கவோ யை பார்க்கில் ((Khao Yai park)) கடந்த சனிக்கிழமை காலை 3 மணிக்கு யானைக் கூட்டம் சாலையை மறித்து நிற்பதாக வனத்துறைக்கு தகவல் வந்தது. அங்கு சென்ற போது குட்டி யானை ஒன்று அருவியில் விழுந்து சடலமாகக் கிடந்தது. அடுத்த சில மணி நேரத்தில் அதைக் காப்பாற்ற முயன்ற அதே கூட்டத்தைச் சேர்ந்த 5 யானைகள் சடலமாகக் கிடந்ததை வனத்துறையினர் கண்டனர்.

கடும் விரக்தியோடும் நின்றிருந்த மேலும் 2 யானைகளை மீட்டனர். இந்நிலையில், இன்றும் அதே இடத்தில் 5 யானைகள் சடலமாகக் கிடப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். கவோ யை பார்க்கில் மிகக் குறுகிய காலத்தில் 11 யானைகள் உயிரிழந்தது இதுவே முதன் முறை எனக் கூறப்படுகிறது.

இந்த யானைகள் ஏன் அதே அருவியில் விழுந்தன என ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.  நரகத்தின் நீர்வீழ்ச்சி என அழைக்கப்படும் அந்த அருவியில் ஏற்கெனவே ஒரு யானைக் கூட்டம் 1992-ம் ஆண்டு கூட்டமாக விழுந்து உயிரிழந்தது.

தாய்லாந்தின் வன உயிர் நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனர் எட்வின் வீக் ((Edwin Wiek)), முதலில் இறந்த யானைகள் கூட்டத்தில், எஞ்சிய பிற யானைகள் பாதுகாப்புக்கும், உணவு தேடலுக்கும் தன் கூட்டத்தையே நம்பியிருந்திருக்கும் என்றும், குடும்பத்தில் பாதி பேரை அது அந்த அருவியில் இழந்திருப்பதாகவும் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments