கும்பல் தாக்குதலால் நாட்டிற்கு கெட்ட பெயரை உருவாக்கதீர்கள் - மோகன் பகவத்

0 302

கும்பல் தாக்குதல் என்பது மேற்கத்திய கலாச்சாரம், அதனை இங்கு செய்து இந்தியாவின் பெயரை கெடுக்க வேண்டாம் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவின் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ்.  சார்பில் நடைபெற்ற விஜயதசமி விழாவில் பங்கேற்ற அவர் அங்கு பேசுகையில், இந்திய அரசியலமைப்பு சட்டம் வகுத்த எல்லைக்குள் மக்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்றார்.

கும்பல் தாக்குல் சம்பவங்கள் நாட்டிற்கும், இந்து சமூகத்திற்கும், அவமானத்தை தேடி தந்துள்ளதாக அவர் கூறினார். விசாரணையின்றி ஒருவரைக் கொல்வது நாட்டிற்கு களங்கம் என்ற அவர், இந்தியாவுக்கு கெட்ட பெயரைத் தேடி தராதீர்கள் என்றார். நாட்டு மக்கள் அனைவரும் சமூக நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்றும் மோகன் பகவத் தெரிவித்தார்.

ஆர்.எஸ்.எஸ். விழாவில் ஹெச்.சி.எல். நிறுவன தலைவர் சிவநாடார், மத்திய அமைச்சர் நிதின்கட்கரி, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸட் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற 111 கும்பல் தாக்குதலில் 44 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் மோகன் பகவத்தின் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்த தாக கருதப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments