தனியார் தங்கும் விடுதியில் பதுங்கி இருந்த போதை மாத்திரை விற்பனை கும்பல் கைது

0 179

சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் பதுங்கி இருந்த போதை மாத்திரை விற்பனை கும்பலை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவேங்கடம் தெருவில் உள்ள தனியார் தங்கும் விடுதியில், இன்று தனிப்படை போலீசார் திடீர் சோதனை நடத்தியபோது, அங்கு ஒரே அறையில் 5 இளைஞர்கள் தங்கியிருப்பதை கண்டனர்.

மேலும் அவர்களது நடவடிக்கையிலும் சந்தேகம் ஏற்பட்டதால் போலீசார் அறை முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது மிட்டாய் மற்றும் ஸ்டாம்ப் வடிவில் 420 மாத்திரைகள்  இருந்ததை கண்டுபிடித்த போலீசார், அவற்றை பறிமுதல் செய்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அதில், அவர்கள் சென்னையை சேர்ந்த கிஷோர் பாபு ,டேனியல், வசந்த், அரவிந்த், ஷோபன் ராஜ் எனவும், போதை மாத்திரை கடத்தலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

இந்த கும்பல் ரயில் மூலம் மும்பையிலிருந்து கடத்தி வரப்படும் போதைப்பொருட்களை, போதைப்பொருள் டீலரான பெரம்பூரை சேர்ந்த அசோக் பாய் மூலம் பெற்று, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.

கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள அவர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், தற்போது இந்த மாத்திரைகள் யாருக்கு விற்பனை செய்ய பதுக்கி வைக்கப்பட்டிருந்தது உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments