7 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு

0 437

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், ஆர்.எஸ்.மங்கலத்தில் 16 செ.மீட்டரும்,கோத்தகிரியில் 6 செ.மீட்டரும், கொடைக்கானல், இளையாங்குடியில் தலா இரண்டு செ.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கின் சுழற்சி காரணமாக ராமநாதபுரம், திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமிர, ஈரோடு, நீலகிரி ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடுமென்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடுமென கூறப்பட்டுள்ளது.

வருகிற 11-ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை நகரில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், நகரின் அதிகப்பட்ச வெப்பநிலை 95 டிகிரி பாரன்ஹீட்டாகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 80.6 டிகிரி பாரன்ஹீட்டாகவும் பதிவாக கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments