அனைத்து ரயில்களிலும் பயோ டாய்லட் வசதி..!

0 247

படிப்படியாக அனைத்து ரயில்களிலும் விமானங்களில் இருப்பது போல பயோ டாய்லட் முறை கொண்டு வரப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே வாரிய உறுப்பினர் ராஜேஷ் அகர்வால் கூறும்போது, தற்போது ராஜதானி, சதாப்தி, ஹம்ஸபர் மற்றும் வந்தே பாரத் உள்ளிட்ட 15 ரயில்களில் பயோ டாய்லட் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், வரும் காலங்களில் அனைத்து ரயில்களிலும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று கூறினார்.

பயோ டாய்லட் பயன்படுத்துவதால் காற்றின் வேகத்தில் கழிவுகள் உறிஞ்சும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய ராஜேஷ் அகர்வால், இதனால் ரயில்களில் பயன்படுத்தப்படும் தண்ணீரின் அளவு பெருமளவு மிச்சப்படுவதுடன், துர்நாற்றம் அறவே இருக்காது எனவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments