சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் தீம் சாம்பியன்

0 182

சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆஸ்திரியா வீரர் டொமினிக் தீம் சாம்பியன் பட்டம் வென்றார்.

பெய்ஜிங் நகரில் நடைபெற்று வந்த இப்போட்டியின், ஆடவர் பிரிவில் கிரீஸ் வீரர் ஸ்டெபானோஸ் சிட்சிபாசை 3-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் அவர் வீழ்த்தினார்.

பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆஷ்லி பார்டியும், ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகாவும் பலப்பரீட்சையில் இறங்கினர். ஒரு மணி 50 நிமிடம் நடைபெற்ற இப்போட்டியில் 3-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் ஒசாகா வெற்றி பெற்று பட்டத்தை வென்றார். இது அவரது 5-வது சர்வதேச பட்டமாகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments