ஹரியானா சட்டசபை தேர்தலில் மோடி பரப்புரை

0 197

ஹரியானா தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் அடுத்த சில தினங்களில் பிரதமர் அங்கு தேர்தல் பரப்புரையில் ஈடுபட உள்ளார்.

இதற்காக அவர் 2 நாட்களில் 4 இடங்களில் பேச உள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது. முதலாவதாக பரிதாபாத் மாவட்டத்தில் உள்ள பல்லாப்கர் என்ற இடத்தில் வரும் 14ம் தேதியும், அதன் மறுநாள் தாத்ரி, தானேசர் மற்றும் ஹிசார் பகுதியிரும் அவர் பரப்புரை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் மோடியைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக செயல் தலைவர் ஜே.பி. நட்டா, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோரும் ஹரியானா தேர்தலுக்காக பரப்புரை மேற்கொள்ள உள்ளதாக பாரதிய ஜனதா கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments