முதியவரின் இறப்பில் சந்தேகம் - உடல் தோண்டியெடுத்து பிரேதப் பரிசோதனை

0 317

தேனி அருகே கடந்த மாதம் உயிரிழந்த முதியவரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக சிசிடிவி காட்சிகளுடன் கொடுக்கப்பட்ட புகாரை அடுத்து அவரது உடல் தோண்டியெடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

பழனிசெட்டிப்பட்டியைச் சேர்ந்த 75 வயது முதியவர் ராஜாராம், கடந்த மாதம் 11ஆம் தேதி உயிரிழந்தார். அவர் உடல்நலமில்லாமல் இருந்து உயிரிழந்ததாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில், செப்டம்பர் 5ஆம் தேதி இரவு அங்குள்ள பாத்திரக்கடை முன்பு படுத்திருந்த ராஜாராமை, அங்கு வந்த அவரது மகன் ராஜேஷ் இரும்புக் கம்பியால் தாக்குவது போன்ற காட்சி அந்தப் பாத்திரக்கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்தக் காட்சிகளை எதேச்சையாகப் பார்த்த பாத்திரக்கடையின் உரிமையாளர், அதைக் கொண்டு ராஜேஷ் தாக்கியதாலேயே முதியவர் இறந்ததாக போலீசில் புகாரளித்துள்ளார். இதனையடுத்து முதியவரின் உடல் தோண்டியெடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

அதன் அறிக்கை வந்தபின்னரே உண்மை தெரியவரும் என்ற நிலையில், தெளிவில்லாத அந்த சிசிடிவி காட்சியில் உள்ளவர்கள் ராஜேஷும் அவரது தந்தையும்தானா என்பதை உறுதிப் படுத்த, போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments