ஜப்பான் ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்

0 178

ஜப்பான் ஒபன் டென்னிஸ் போட்டியில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற இறுதி போட்டியில், ஆஸ்திரேலிய வீரர் ஜான் மில்மேனை (John Millman) ஜோகோவிச் எதிர்கொண்டார்.

போட்டியின் தொடக்கத்தில் இருந்தே ஜோகோவிச்சின் ஆதிக்கமே நிலவியது. அவரது விளையாட்டுக்கு ஜான் மில்மேனால் ஈடுகொடுக்க முடியவில்லை. முடிவில் 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ஜான் மில்மேனை ஜோகோவிச் தோற்கடித்தார். இதன்மூலம் ஜப்பான் ஒபன் டென்னிஸ் போட்டியில் அவர் முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார்.

அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியின் 4ஆவது சுற்றில் தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தினால் பாதியிலேயே ஜோகோவிச் விலகினார். இதையடுத்து காயத்தில் இருந்த மீண்ட அவர், விளையாடிய முதல் போட்டி ஜப்பான் ஓபன் டென்னிஸ் ஆகும். அதில் சாம்பியன் பட்டத்தை ஜோகோவிச் சென்றிருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments