விஜயதசமியன்று பள்ளிகளை திறந்து வைத்து மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவு

0 246

தமிழ்நாடு முழுவதும் விஜயதசமி நாளில், 3 வயது பூர்த்தியடைந்த குழந்தைகளை அரசின் அங்கன்வாடி மையங்களில் KG வகுப்புகளுக்கும், 5 வயது முழுமை பெற்ற மாணவர்களை அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலும் சேர்க்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

வரும் 8 ந் தேதி விஜயதசமியன்று பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்த்து கல்வி கற்றலை தொடங்கி வைக்க உகந்த நாளாக கருதுகிறார்கள்.

இந்நிலையில் மாநிலம் முழுவதும் 2,381 அங்கன்வாடிகளில் KG வகுப்புகள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. எனவே அன்றைய தினம் பெற்றோர் 3 வயது பூர்த்தியடைந்த தங்கள் குழந்தைகளை அருகாமையில் உள்ள அங்கன்வாடி மையத்தில்  KG வகுப்பிலும், 5 வயது பூர்த்தியான குழந்தைகளை அரசு பள்ளிகளிலும் சேர்க்கலாம் என்றும், விஜயதசமி நாளில் மாணவர் சேர்க்கை நடத்த தடை ஏதும் இல்லை என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments