உடல் பருமனால் வரும் ஆபத்து..!!

0 455

2030-ம் ஆண்டுக்குள் உலகளவில் 25 கோடி குழந்தைகளும், பதின் பருவத்தினரும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்றும், இந்தியா அதில் 2-ம் இடத்தில் இருக்கும் என்றும் உலக உடல் பருமன் கூட்டமைப்பு கணித்துள்ளது. 

இந்தக் கூட்டமைப்பு  5 வயது முதல் 19 வயதுக்குட்போட்டோருக்கு ஒபெசிட்டி எனும் உடல் பருமன் அதிகரிக்கும் பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு உலகளவில் அதிக ஆபத்தை எதிர்கொள்ளும் நாடுகளைப் பட்டியலிட்டுள்ளது. அதன்படி, 2030-ல் 6 கோடியே 19 லட்சம் பேருடன் சீனா முதலிடத்திலும், 2 கோடியே 74 லட்சம் பேருடன் இந்தியா 2-ம் இடத்திலும் உள்ளது. 

அமெரிக்காவும், இங்கிலாந்தும் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. எளிதாகக் கிடைக்கும் துரித உணவுகள், உடற்பயிற்சியின்மை, ஓடி விளையாடுதல் குறைவு, மொபைல், டி.வி. போன்று திரையிலேயே அதிக நேரம் செலவிடுதல், சைக்கிள் ஓட்டுவோரின் எண்ணிக்கை குறைவு ஆகியவை வருங்காலத் தலைமுறையை அதிக உடல் பருமனுக்கு தள்ளுவதாக சிட்னி பல்கலைக்கழக குழந்தைகள் நலத்துறைத் தலைவர் லூயிஸ் பார் கூறியுள்ளார்.

உடல் பருமனால் ரத்தக் கொதிப்பு ஏற்பட்டு சிறுவயதிலேயே இதய நோய் வரும் வாய்ப்பு அதிகம் என்றும், டைப் 2 சக்கரை நோய், 12 வகையான புற்றுநோய் உள்ளிட்டவற்றுக்கும் அதிக உடல் பருமன் முக்கியக் காரணங்களில் ஒன்று எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கு உலகளவில் விற்பனையாகும் குளிர்பானங்களும், பதப்படுத்தப்பட்ட உணவுப் பண்டங்களும் பெரும்பங்கு வகிப்பதாகவும், புவி வெப்ப மயமாதல் போல், அடுத்த தலைமுறையின் ஆயுளைக் குறைக்கும் உடல் பருமன் விஷயத்திலும் அரசுகள் அக்கறை காட்டி, தீங்கு விளைவிக்கும் உணவுப் பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த ஆய்வில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments