ஐஆர்சிடிசி பங்குகளை வாங்க கடும் போட்டி

0 304

இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டுரிசம் கார்பரேசனான ஐஆர்சிடிசியின் பங்குகளை வாங்க 100 மடங்குக்கு அதிகமாக முதலீட்டாளர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

நிதி பற்றாக்குறையை சமாளிக்கும் விதமாக நடப்பு நிதி ஆண்டில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்து 80 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில், ரயில்வேயின் கீழ் இயங்கி வரும் அதனை துணை நிறுவனமான ஐஆர்சிடிசியின் சுமார் 13 சதவீத பங்குகளை விற்று 645 கோடி ரூபாய் திரட்டும் நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளது. ரயில்வே டிக்கெட், ரயில் நீர், கேட்டரிங் போன்ற சேவையில் ஈடுபட்டுள்ள ஐஆர்சிடிசியின் 2 கோடியே 2 லட்சம் பங்குகள் விற்பனைக்கு வந்துள்ள நிலையில், 225 கோடி பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

கடன் இல்லாதது, வேகமாக வளர்ந்து வரும் நிறுவனம் போன்ற பல்வேறு வாய்ப்புகளை கருத்தில் கொண்டு முதலீட்டாளர்கள் 112 மடங்குக்கு விண்ணப்பம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 315 முதல் 320 ரூபாய் வரை ஒரு பங்கின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த வாரம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் போது பங்கு விலை கணிசமாக உயரும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதனால் உடனடியாக லாபம் பார்க்கும் விதத்திலும் இந்த அளவுக்கு அதிகம் விண்ணப்பம் பெறப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட விதத்தில் கணினி முறையில் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு அளிக்கப்பட உள்ளன. டிமாண்ட் அதிகமாக இருப்பதால் சிலருக்கு கேட்ட எண்ணிக்கையை விட குறைவான பங்குகளே கிடைக்கலாம், அல்லது கிடைக்காமல் போகவும் வாய்ப்பு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments