தலைக்கவசம் அணியாமல் வந்து போலீசாரிடம் வாக்குவாதம்

0 307

சேலத்தில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக கடுமையான சட்டதிட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், அதனை செயல்படுத்தும் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. சேலம் ராமகிருஷ்ணா சாலையில் போக்குவரத்து போலீசார் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக தலைக்கவசம் அணியாமல் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த குமார், அவரது மனைவி சசிகலா, மகன் வசந்த் ஆகியோரை போலீசார் மடக்கி அபராதம் கேட்டுள்ளனர்.

அப்போது இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இடையில் குமாரின் நண்பரான பழனிசாமி என்பவரும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். போலீசார் தன்னை தாக்கியதாகக் கூறி குமார் சாலை நடுவே அமர்ந்து மறியலிலும் ஈடுபட முயன்றார்.

இதனையடுத்து போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் நான்கு பேரையும் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments