இந்திய விமானப்படை தளங்களில் உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து மீண்டும் பாதுகாப்பு

0 1172

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் இந்திய விமானப்படை தளங்களில் மீண்டும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்டு மாதம் 5-ஆம் தேதி மத்திய அரசு ரத்து செய்த து. இதனால் ஆத்திரமடைந்துள்ள பாகிஸ்தான், அந்நாட்டில் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் மூலம் தாக்குதல் நடத்தக்கூடுமென இரு வாரங்களுக்கு முன்னர் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது.

இதையடுத்து காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநில எல்லையோரத்தில் உள்ள விமானப்படை தளங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்நிலையில் பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் இந்திய விமானப்படை தளங்களில் தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபடக்கூடும் என்று உளவுத்துறை மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பயங்கரவாதிகளின் தொலைபேசி உரையாடலை இடைமறித்து கேட்டதில் இந்த தகவல் தெரியவந்துள்ளதாக உளவுத்துறை குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து, ஸ்ரீநகர், அமிர்தசரஸ், பதன்கோட் உள்ளிட்ட விமானநிலையங்கள், விமானப்படை தளங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த விமானப்படை தளங்களுக்கு இரண்டாம் கட்ட உயர் எச்சரிக்கையான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை இது ரெட் அலர்ட்டாக மாற்றப்பட்டால் விமானப்படை தளங்களுக்கு அருகில் உள்ள பள்ளிகளை மூடவும், அந்த பகுதிகளில் மக்கள் நடமாடவும் தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments